பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டக்காரன் 93

களையும் நெற்றியையும் அதன்மேல் அழுத்தின்ை. 'செட்டியார் அவனைப் பார்த்துக்கொண்டே இருங் தார். சரி; நான் போய் வருகிறேன்' என்று சொல்லி விட்டு வேகமாகப் போய்விட்டான் கிழவன்.

ஆச்சரியத்தில் முழுகின செட்டியார் தம் தோட் டக்காரனை விவரமாக விசாரித்தார். அந்தக் கிழ வனப் பலமாக அடித்துவிட்ட பிறகு அவனுக்குச் சிறிது பச்சாத்தாபம் உண்டாயிற்று. கிழவன் தன் னிடம் கெஞ்சினதையும் தான்் மறுத்ததையும் அன்று அவன் அம்மரத்தை விடாப்பிடியாகக் கட்டிக்கொண் டிருந்ததையும் சொன்னன். செட்டியார் பின்னும் சிலர் மூலமாக விசாரித்ததில் அங்தத் தோட்டத்தின் அழகுக்கும் வளப்பத்துக்கும் கிழவன் குப்புசாமியே காரணமென்பதை அறிந்தார். அவனே அழைத்துக் கொண்டு வந்து தோட்டத்தில் வேலை செய்யச் சொல்லலாம். இப்பொழுது இருப்பவனுக்கு உதவி யாக இருக்கட்டும் என்று எண்ணினர்.

- ஆனல், குப்புசாமி எங்கே அன்றிரவு வீட்டிலே காணப்பட்டவன்தான்்! அப்புறம் அவனே எல் லோரும் தேடிக்கொண்டிருக்கிருர்கள். அந்த மாமரத் தினிடம் தான்் போகும் இடத்தைச் சொன்னனே என்னவோ, யார் கேட்டு அறிவார்கள்? . . . . . . . .