பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமுவின் மர்மம் 95

கேட்டை யாரிடம் போய்ச் சொல்லி அழுகிறது? இக்த வீட்டுச் சட்டதிட்டங்களே அலாதி.”

'ஏன், அம்மா, இப்படி இல்லாததும் பொல்லா ததும் பேசுகிருய்? அவர் எத்தனை நல்லவராக இருக் கிருர்? நீ என்ன வைதாலும் சிரித்துக்கொண்டே இருக்கிருரே!” என்று இடைமறித்துக் கேட்டாள் அம்புஜம். < > r

"சி, அதிகப்பிரசங்கி! அவர் என்ன வேண்டி யிருக்கிறது, அவர் சமையற்காரனுக்கு மரியாதை! எருமைமாடுகூட அடித்தாலும் சுரனே கெட்டு நிற் கிறது. அது ரொம்ப நல்லதாக்கும்" என்று சீறி விழுங்தாள் அம்மணியம்மாள். -

'எல்லாரிடத்திலும் மரியாதையாக கடந்து கொள்ள வேண்டுமென்று எங்கள் உபாத்தியாயர் சொன்னர். கம்முடைய பிரதம மந்திரிகூடத் தம் கீழுள்ள உத்தியோகஸ்தர் சேவகனப் பியூனென்று கூப்பிட்டபோது, பேரைச் சொல்லிக் கூப்பிடச் சொன்னுராம்.”

'போதும், வாயை மூடு. உங்கள் மந்திரியுமாச்சு; மகாராஜனுமாச்சு. மேல், கீழ் தெரியவில்லை; இடது கை, வலதுகை தெரியவில்லை. காலம் கெட்டுப்போய் விட்டது.” - ... - *

அம்மணியம்மாள் பேச்சு வைதிக சம்பிர தாயத்தை எட்டிப் பார்த்தது. சமையற்காரனிடம் பிடித்த கோபம் மந்திரியிடத்தில் வந்து கின்றது. அவளுக்கு ஏன் அத்தனே கோபம் நியாயமில்லாமலா கோபித்துக்கொள்கிருள்?

  • 来源 来