பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கலைஞன் தியாகம்

" . அனந்தகாரர்யணேயர் ஒரு கெளரவமான குடும். பத்திலே பிறந்தவர். பரம்பரையாக அரியூரில் மணிய இாரராக இருந்த குடும்பம் அது. அவருடைய தகப் பஞர் பொதுவாக கல்லவர். இங்கிலீஷ்ப் படிப்பு அவருக்கு இல்லை. ஆனாலும் அந்தக் குறை தம்முடைய ஒரே பிள்ளைக்கு இருக்கக்கூடாதென்று எண்ணினர். பி. ஏ., பி. எல்., வரையில் படிக்கவைத்தார். அப்புறம் பிள்ளை அப்ரெண்டிஸ்ஸாக இருந்தபோது உலகத் தினிடம் விடை பெற்றுக்கொண்டுவிட்டார்.

அனந்தநாராயணயர் திருச்சிராப்பள்ளியிலுள்ள நூற்றுக்கணக்கான வக்கீல்களில் ஒருவர். அவ்வளவு தான்். அவருக்கென்று தனிப் பெருமையை அளிப் பதற்குரிய சரக்கு ஒன்றும் அவரிடம் இல்லே. உத்தி யோகம் பார்த்துவிட்டு உபகாரச்சம்பளம் பெறும் தாசில்தார் பெண் ஒருத்தியை அவர் விவாகம் பண்ணிக்கொண்ட விஷயத்தில் அவருக்குச் சிறிது மதிப்புக் கொடுக்கலாம். அம்மணியம்மாள், அதிகார தோரணையில் அப்பா தாலுக்கா ராஜ்யபாரத்தை நடத்தி வருகையில் பிறந்து வளர்ந்தவள். ஆகை யால் அவளிடம் அதிகார குணம் ஒரளவு குடி கொண்டிருந்தது. ஆனாலும் இளகின மனமுடைய வள்; உபகாரி, வாய்மட்டும் சிறிது பெரிது. அதற் கென்ன? எல்லாருக்கும் எல்லாம் .பொருந்தியிருக் கிறதா?

வக்கில்களுக்கு வரும்படி மோசமாய் வந்த காலம். பேசாமல் போர்ட்ை எடுத்துவிட்டுச் சொந்தக் கிராமத்திலே போய் அக்கட்ாவென்று இருந்து விடலாமே என்றுகூடச் சில சமயங்களில் அனந்த