பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கலைஞன் தியாகம்

அவனுக்கே உங்கள் பெண்ணேக் கொடுத்தாலும் கொடுத்துவிடுவீர்கள்.”

இந்தக் கடைசி வாக்கியத்தைக் கேட்டதும்

வக்கீல், ஹா' என்று ஏதோ புதியதொரு விஷ யத்தை அறிந்தவர்போல ஆச்சரியமும் சங்தோஷமும் பொங்கக் கூவினர். அம்மணி அம்மாளுக்கு அங்தத் தொனியின் அர்த்தம் விளங்கவில்லை. அது அவர் ஹருதய உணர்ச்சிகள் அலைமோதி வழிந்த ஒலியென் பதை அவள் எப்படி உணர்வாள்! தான்் சொல் வதைத் தடுத்துச் சொல்லுகிருரென்றே நினைத்தாள்.

"இந்தமட்டாவது உங்களுக்கு நம் அந்தஸ்து ஞாபகம் இருக்கிறதே. அம்புஜத்தின் கல்யாணத்தை கடத்த ஏற்பாடு செய்யவேண்டாமா?”

அன்றைக்கு ஐயர் தம் மனத்தில் ஏதோ ஒரு தீர்மானம் செய்துகொண்டார். அவருக்கு ஏன் அவ் வளவு உற்சாகம்! அந்த நிமிஷத்தில் அவருடைய முகத்தில் திருப்தியாகிய உணர்ச்சி எவ்வளவு விசத மாக எழுதப்பட்டு விளங்கிற்று!

மறுநாள் இரவு ஒருமணி வரையில் ராமுவும் அனந்தநாராயணயரும் ரகஸ்ய ஆலோசனை புரிக் தனர். நீண்ட வாக்குவாதங்கள் நடைபெற்றன வென்று தோன்றியது. அனந்தநாராயணயர் அந்த வாதத்திற்கூட வெற்றிபெற்றிருக்கவேண்டும். அவர் முகத்தில் அந்த வெற்றியின் விளம்பரம் ஒட்டப் பட்டிருந்தது. -

来 米 米