ராமுவின் மர்மம் 105
ஒரு வாரம் சென்றது. அன்று இரவு அம்மணி யம்மாள் சுமுகமாக இருந்தாள். ஐயர் மிக்க அன் போடு ஸல்லாபம் செய்யத்தொடங்கினர்.
'நான் சென்னபட்டணம் போக உத்தேசித் திருக்கிறேன்' என்று அவர் மெல்ல ஸம்பாஷணை செய்யத் தொடங்கினர்.
'போய்வர எவ்வளவுநாள் செல்லும்?' என்று கொஞ்சலாகக் கேட்டாள் அவருடைய தர்மபத்தினி. ‘போய் வருவதா? அங்கேயே போய் வக்கீல் உத்தியோகம் பார்க்கலாமென்று எண்ணம்.”
‘அங்கே போனல் உங்களுக்குச் செளகரியப் படுமா?’’
'ஏன் செளகரியப்படாது? எவ்வளவோ கேஸ்’ கள் கிடைக்கும். இப்பொழுதுகூட நான் அடிக்கடி அங்கே போய்விட்டு வரவில்லையா?”
'அப்படியானுல் அம்புஜத்தின் கல்யாணத்தைப் பற்றி எப்பொழுது யோசிக்கிறது?’ -
'அதற்கென்ன பிரமாதம்? அங்கேயே போய் கடத்தலாம்.” -
'சரி. அங்கே நல்ல சமையற்காரன் அகப்படு வான?” -
பேஷானவன் அகப்படுவான்.” - இந்தப் பதிலில் தன்னுடைய கோரிக்கை பூர்த்தி யாகிவிட்டதாக அம்மாள் பூரித்தாள். ராமு ஒழிந்து விடுவான். ரகஸ்யப் பேச்செல்லாம் போய்விடும். ஏதோ நல்ல காலங்தான்்' என்று அவள் சங்தோஷித்