பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமுவின் மர்மம் 107.

அதிசயங்களைக் கேட்கக் கேட்க அவள் ஸ்தம்பித்துப். போனள். ஒவ்வொரு மர்மமாக வெளிவரும்போது, அவள் கனவு காண்பதாகவே எண்ணிள்ை. அப்படி அவள் திகைக்கும்படி அவர் என்ன சொன்னர்? ராமுவைப்பற்றிய மர்மங்களே!

ராமு ஒரு பெரிய குடும்பத்தில் உதித்தவன். இளமையிலேயே தாயை இழந்தவன். பி.ஏ., பி.எல்., வரையில் படித்தான்். அவன் தாய்க்குப் பிறகு அவன் தகப்பனர் இரண்டாவது மனேவியொருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டார். அவளுடைய மந்தி ரோபதேசத்தால் ராமுவிடம் தகப்பனருக்கு இருந்த பிரியம் போய்விட்டது. அவரும் பலவிதத்தில் சொத் தெல்லாம் தொலைந்து இறந்தார். அவர் இளைய மனேவியோ அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு தன் பிறந்தகம் போய்ச் சேர்ந்தாள். .

பி.ஏ., பி.எல்., பட்டத்தைக் காகிதத்தில் எழுதிப் பிடித்துக்கொண்டு ஊரெல்லாம் அலைந்து வேலைக் குத் திண்டாடினன் ராமு. ஒன்றும் கிடைக்கவில்லை. அவனுக்குமுன் ஒவ்வோர் இடத்தையும் நூற்றுக் கணக்கான பேர்கள் படையெடுத்திருந்தார்கள். எங் கெங்கோ போய், எப்படி எப்படியோ அலைந்து ஒரு வக்கீலிடம் இருபது ரூபாய்க்குக் குமாஸ்தாவாக அமர்ந்தான்். மெல்ல அப்பிரண்டிஸ் பரிகையில் தேர்ச்சி பெற்ருன். அப்பால் வக்கீல் ஸ்ன்னத்துப் பெற 800 ரூபாய் வேண்டுமே. யார் தருவார்கள்?