பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமுவின் மர்மம் 109

மென்று எழுதி அதற்குள்ளே வைத்துவிட்டான். அந்த எழுத்துத்தான்் முதல் முதல் ராமுவின் மர்மம் வெளிப்படுவதற்குக் காரணம். மறுநாள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட வக்கீல் ராமுவை அழைத்து, 'இந்தக் காகிதம் ஏது?’ என்று கேட்டார். அவன் தனக்குத் தெரியாதென்று சாதித்துவிட்டான். வழிக் குத் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அதை கடத்தும் வழியை விளக்கிய கடிதம் ஐயருக்குக் கிடைத்தது. அவர் எவ்வளவு நாள் இதை அறிந்து கொள்ளாமல் இருப்பார் ஒருநாள் கையுங்களவுமாக ராமுவைப் பிடித்துவிட்டார். அப்பால் அவனுடைய பூர்வ வரலாறு தெரிந்தது. அவருக்கல்லாமல் மற்ற எல்லோருக்கும் தான்் சமையற்காரணுகவே இருக்க வேண்டுமென்று அவன் வேண்டிக்கொண்டான். அது தான்் தனக்குச் செய்யும் உபகாரமென்று பிரார்த் தித்தான்். என்ன அடக்கம்! என்ன சிறந்த குணம்: நாளடைவில் இந்த மர்மநிலை ஐயருக்குப் பிடிக்க வில்லை. தம் மனேவி அகஸ்மாத்தாக அம்புஜத்தின் கல்யாணத்தில் ராமுவைச் சம்பந்தப்படுத்திப் பேசிய அன்று ஐயர் ஞானேதயமானதுபோலச் சங்தோஷப் பட்டார். ஏன் அப்படியே செய்துவிடக்கூடாது? என்று யோசித்தார். அந்த ஊரில் செய்தால் நன்ரு. யிராதென்று எண்ணினர். பலநாள் யோசித்தபிறகு சென்னைக்குச் சென்றுவிட்டால் ராமு சமையல் உத்தி யோகத்தை விட்டுவிட்டு வக்கில் ஆகலாம்; அம்பு ஜத்திற்குக் கணவனுமாகலாமென்று கிச்சயித்தார்.

இவ்வளவு ஸ்மாசாரங்களேயும் அம்மணியம்மாள் கேட்டாள். அவளுக்குப் பதில் பேச முடியவில்லை.