பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கலைஞன் தியாகம்

'இப்பொழுது உனக்கு எல்லாம் தெரிந்துவிட்ட தல்லவா? அவன் இல்லாவிட்டால் கான் ஒரு செல் லாக் காசுக்குச் சமானங்தான்். அவனும் வக்கீலாகி என்ளுேடு சேர்ந்துவிட்டால் அப்புறம் கம்மைக் கட்டிப்பிடிக்கிறவர்கள் யார்?'

எப்படியோ ஐயர் அம்மணியம்மாளின் சம்மதத் தைப் பெற்றுவிட்டார். தொழிலினல் ஏற்றத் தாழ் வில்லையென்பதை அம்புஜம் முதற்பாடத்திலிருந்தே படித்தவள். அதல்ை அவளுக்கு ராமுவினிடம் என்றும் இழிவான அபிப்பிராயமே தோற்றியதில்லை. ஆனல் வரவர அவளே அறியாமல் ஒரு பாசம்மட்டும் அவள் மனத்தை ராமுவோடு இறுகப் பிணித்தது.

来 米 来

இப்பொழுது சென்னேயில் ராமஸ்வாமி ஐயரும் அனந்தநாராயனேயரும் சேர்ந்து வக்கில் தொழில் கடத்துகிருர்கள். 'எல்லாம் அம்புஜத்தின் அதிருஷ் டம்' என்று தங்கள் உயர்ந்த பதவிக்குக் காரணம் கூறிக்கொண்டு அம்மணியம்மாள் உடம்பிலுள்ள ஆபரணங்களே ஒரு குலுக்குக் குலுக்குகிருள். ராமு தன் சமையல் தொழிலே விட்டு ராமஸ்வாமி ஐயராகி வக்கீல் தொழிலே ஏற்றுக்கொண்டாலும் பழைய அடக்கமும் பணிவும் அவனே விட்டு அகலவில்லை. அந்தக் குணங்கள் அம்புஜத்தினிடம் பிரதிபலித்தன. இருவரும் அன்புத்தளேயால் கட்டப்பட்டு எப் பொழுதும் ஒரே கிலேயில் வாழ்கின்றார்கள். -