பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கலைஞன் தியாகம்

அவனுடைய சித்திரங்கள் அவனது கற்பனேத் திறனே நன்ருக வெளிப்படுத்தின. கற்பனையுலகத் தில் அவன் ஓர் அரசனுக இருந்தான்். அவனுடைய வீடு, பொருள், சுகவாழ்வு ஆகியவற்றைப் பார்த்தால் இந்த உலகத்திலும் அவன் அரசனைப்போலவே வாழ்ந்துவர முயன்ருனென்று தோற்றும்.

அவனுக்கு ஜமீன்தார்களெல்லாம் பழக்கம். பல சிற்றரசர்களுடைய அபிமானத்தை அவன் பெற்ருன். தான்் குடியிருக்க அழகான பங்களா ஒன்றைக் கட்டிக்கொண்டான். அது சித்திரமாளிகையாக விளங்கியது. சித்திரக்கலையிலும் வாழ்க்கைக்கலை யிலும் அவன் ஒருங்கே சிறப்படைந்து விளங்கினன்.

ஜமீன்தார்களுக்குள் இளவயதுடையவர்கள் பலர் அவனிடம் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பார் கள். பணத்தைச் சுகபோகங்களில் வரம்புக்கு மிஞ்சி அழித்துவரும் அவர்களின் உள்ளத்தைத் தாமோ தரன் அளந்து அறிந்திருந்தான்். அவர்கள் உள்ளத் தைச் சிக்கவைக்கும் சித்திரங்கள் பலவற்றை அவன் எழுதி ரகசியமாக வைத்திருந்தான்். இயற்கைக் காட்சிகளிலோ, அபூர்வ சித்திரங்களிலோ அந்தச் சிங்கார புருஷர்களுக்கு விருப்பம் இராது. அழகிய பெண் உருவங்கள், காமக்குறிப்புத்தோன்றும் கோலம் அமைந்த காட்சிகள், முழு கிர்வாணப்படங்கள், அரை நிர்வாணப்படங்கள் இவற்றில் அவர்கள் ஈடுபட்டார் கள். உலகம் புகழும் சித்திரங்களிற்ை பெருத லாபத்தை அந்தச் சித்திரங்களால் தாமோதரன் அடைந்தான்். ஆனால், அவைமட்டும் லேசானவை