பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கலைஞன் தியாகம்

வாங்கிக்கொள்வார்கள். தாமோதரனும் தன்னிடம் அவர்கள் விரும்பும் ரகத்திலுள்ள படங்களெல்லா வற்றையும் காட்டுவான். ஆனல் இந்தப் படத்தை அவ்வளவு மலிவாக்கிவிட அவன் மனம் விரும்பவில்லை. 'இது ஒரு பெரிய பொக்கிஷம்; மற்றொருவர் இதைப் பார்ப்பதற்குக்கூட விலே கொடுக்க வேண்டும் என்பது அவன் கருத்து. உண்மையில் அதற்கு அதுவே ஒப்பாக இருந்தது. அதில் பூரணமாக கிரம்பிய கலைச் செல்வத்தை அவன் கொட்டியிருந்தான்்; அதிலிருந்து பெருந்தொகையாகப் பொருட்செல்வத்தை அடைய லாமென்பது அவன் ஆசை.

来源 来 兴

குமாரபுரி ஜமீன்தார், தாமோதரனுடைய படங் களைப் பார்க்க வருவதாக எழுதியிருந்தார். அவர் ஒரு சிற்றரசரைப் போன்ற செல்வமுடையவரென்று அவன் கேள்விப்பட்டிருக்தான்். ஆனால் அதுவரையில் அவரைப் பார்த்ததில்லே. தான்் ஒருவருக்கும் காட்டாமல் வைத்திருக்கும் படத்தை அவருக்குக் காட்டலாமென்று அவன் கினைத்தான்்.

ஜமீன்தார், தாமோதரன் வீட்டிற்கு வந்தார். முப்பது வயது இருக்கும் அவருக்கு. தாமோதரன் உலகப்பிரசித்திபெற்ற தன் படங்களேயெல்லாம் காட்டினன். "இவைகளெல்லாம் மிகவும் கன்ருக இருக்கின்றன. இந்த மாதிரியுள்ள உங்கள் படங் களே நான் பல இடங்களிலே பார்த்திருக்கிறேன். நான் இவைகளேமாத்திரம் பார்த்துப் போக இங்கே வரவில்லை' என்று ஜமீன்தார். பீடிகை போட்டார்.