பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த முகம் 117

'தக்க விலை வந்தால் கொடுக்கலாமென்றுதான்் எண்ணுகிறேன். ஆனல் விலை தருபவர்கள் கிடைப் பது அரிது.”

'அப்படிச் சொல்லாதீர்கள். அபூர்வ வஸ்து ஒன்றைப் பெறவேண்டுமானல் பணங்தான் பிரமா தம் கான் அந்தப்படத்தைப் பார்க்காமலே, பெற்றுக் கொள்வதாக வாக்களிக்கிறேன். ஆயிரமல்ல, இரண் டாயிரமானலும் தருகிறேன்' என்று ஜமீன்தார் கூறும்போது தாமோதரன் முகம் மலர்ந்தது.

'இது நிச்சயம்: நீங்கள் யோசிக்கவேண்டாம். கான் கட்டாயம் அதை வாங்கிக்கொள்கிறேன். அதைப் பார்க்கவேண்டுமென்று என் மனம் துடிக் கிறது” என்று ஜமீன்தார் தவியாகத் தவித்தார்.

தாமோதரன் ஒரு நீண்ட பெட்டியைக் கொண்டு வங்தான்். ஒரு பக்கத்தில் படங்களை விரித்து வைத்துக் காட்டும் சட்டம் இருந்தது. தான்் கொணர்ந்த பெட்டியைத் திறந்தான்். அதற்குள் வெகு பத்திர மாக வைத்திருந்த படச்சுருளே எடுத்து அந்தச் சட்டத்தில் மாட்டினன்.

ஜமீன்தார் கண்களை மலர விழித்து அதைப் பார்த்தார்; 'ஹா' என்று தம்மை அறியாமலே கூறினர். அவர் முகத்தில் சந்தோஷக் குறிப்பு உண்டாகவில்லை. அங்தப் படத்தைக் கூர்ந்து கவனித்தார். ஒவ்வொரு கணத்திலும் அவர் முகத்தில் கோபக்குறிப்பும் வாட்டமும் தோற்றின. இடை யிடையே பெருமூச்சு விட்டார். -