பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த முகம் 119

வர்களே நான் கண்டதில்லை' என்று ஸ்தோத்திரம் செய்தான்்.

ஜமீன்தார் அவன் கூறியவற்றைக் காதிலே வாங்கிக்கொள்ளவே இல்லை. அவர் ஏதோ யோசனை யில் ஆழ்ந்திருந்தார்.

'இந்தப் படம் இனிமேல் உங்களதாகிவிட்டது. இனி இதை நான் அடிக்கடி பார்க்க முடியாது. இப் பொழுது ஒருமுறை உங்களுடைய அநுமதி பெற்றுப் பார்க்கிறேன்' என்று தாமோதரன் பணிவாகச் சொன்னன்.

ஜமீன்தார் தலையை அசைத்தார். தாமோதரன் அவருக்குமுன் சுவரில் அதைத் தொங்கவிட்டான். அவனும் ஜமீன்தாரும் அதை உற்று நோக்கினர். திடீரென்று ஜமீன்தார் தாமோதரனேப் பார்த்து, 'இந்தப் படத்திற்கு மூலம் எது?” என்று கேட்டார்.

'என் மனந்தான்்.” 'ஏதாவது போட்டோவையோ அல்லது பெண் அணுருவத்தையோ பார்த்து இதை எழுதியிருக்கலா மல்லவா?” -

'இல்லை; என் கற்பனலோகத்தில் எவ்வளவோ பெண்களே நான் சிருஷ்டிக்கிறேன். அவர்களில் ஒருத்தி இவள்.”

"அப்படியா ............ இந்தப் பங்களாவின் பின்புள்ள சோலேயில் சிறிது உலாவலாம்; வருகிறீர் களா?' என்று ஜமீன்தார் கேட்டார்.

'ஆஹா அப்படியே” என்று சொல்லி எழுங் தான்் தாமோதரன். -