பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 5

மாசுமறுவற்ற கிருஷ்ணனது உள்ளத்திலே ஒரு சிறு கறுப்புத் தோன்றலாயிற்று. எங்கிருந்தோ வந்தான்்; கூலிகூட வேண்டாம், சோற்றுக்கு வேலை செய்வேனென்றன். இப்பொழுது நம்முடைய அப்பனேத் தன்னுடைய அப்பணுக்கிக்கொண்டான். இந்தக் கிழவனும் அவனே ஆகாயத்தில் தாக்கி வைத்துப் பேசுகிருன். நம்மைக் காட்டிலும் அந்தப் பயலிடத்திலே அபாரமான `ಎTಥ್ರನಾತ! இதெல்லாம் எப்படியா குமோ, எங்கே கொண்டுபோய்விடுமோ!' என்று அவன் யோசனை செய்யத் தொடங்கினன். பொருமைத் தீயின் ஒரு பொறி அவன் உள்ளத்தில் தோன்றியது. கலவன்மையில்லாத அந்த உள்ளத்தின் பலஹீனம் - தாழ்வுணர்ச்சி - அந்தப் பொறியைச் சுலபத்தில் மூட்டிவிட்டது. -

முருகன், தொழில் பழகவந்தவன் கலையையே ஸ்வீகரணம் செய்து கொண்டான். அவனுடைய கை கிழவன் கையை விட அதிவேகமாக ஓடியது. கிழக்கலைஞனுக்குக் கற்பனை அதிகம்; ஆனால் அந்தக் கற்பனே முழுவதையும் உரு வாக்கு வ தற்கு அவனுடைய கைவிரல்கள் ஒடவில்லை; வயதின் கனம் பழைய முறுக்கைத் தளர்த்திவிட்டது; ஆனாலும் மனத்துக்கு வயசு ஏது? அதன் கற்பனே மாத்திரம் உச்சஸ்தாயியிலேதான்் சென்றது. இப்பொழுது அந்தக் கற்பனை வெறுங்கனவாகவே இருந்து மங்கி விடாதபடி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இளங்குமரனுகிய முருகன், கிழவனது உள்ளத்தோடு தன் உள்ளத்தை வைத்து உணர்ந்தான்். அந்த உள்ளத்தில் உண்டாகிய கற்பனைகளே அவன் கைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/13&oldid=686175" இலிருந்து மீள்விக்கப்பட்டது