பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கலைஞன் தியாகம்

சித்திரங்களை அவன் எழுதினன். குமாரபுரி ஜமீன் தாருக்குப் படம் கொடுத்த பிறகு அந்தமாதிரிப் படங் கள் எழுதித் தனியே ஜமீன்தார்களுக்குக் காட்டும் காரியத்தை விட்டொழித்தான்். அவர்களின் சிநேகத் தையும் வரவரக் குறைத்துக்கொண்டான்.

அவன் எதிர்பார்க்கவே இல்லை: அன்று குமாரபுரி ஜமீன்தார் வந்தார். துக்கமே உருவாக வந்தது போல் இருந்தது அவர் உருவம். 'என்னே அடை யாளம் தெரிகிறதா?” என்று கேட்டுக்கொண்டே தாமோதரன் இருந்த அறைக்குள் அவர் நுழைந்தார். அவனுக்குத் திடுக்கிட்டது. "ஆமாம்; உ ங் க ளே அடையாளம் தெரியாமலென்ன? உங்கள் துப்பாக்கி வந்திருக்கிறதா?’ என்று கையாண்டியாகக் கேட் டான் தாமோதரன்.

'மன்னிக்கவேண்டும். அந்தப் பழைய சமா சாரங்களை மறந்துவிடும்படி மன்ருடிக் கேட்டுக் கொள்கிறேன். என்னே ஐந்து வருஷத்துக்குமுன் இருந்த பழைய ஆசாமியாக எண்ணவேண்டாம். கான் இப்போது உங்கள் தயையை எதிர்நோக்கி நிற்கிறேன்.”

'குமாரபுரி ஜமீன்தாரா இப்படிப் பேசுகிருர்! என்று ஆச்சரியப்பட்டான் தாமோதரன். துப்பாக் கியைக் காட்டி மிரட்டியவர் இவ்வளவு பவ்யமாகப் பேசக் காரணம் என்ன?

'உங்கள் முகத்தில் விழிப்பதற்குக்கூட எனக்கு யோக்கியதை இல்லை. ஆனலும் ஒரு யாசகனைப் போல உங்களிடம் வந்திருக்கிறேன்.” -