பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கலைஞன் தியாகம்

'அப்பன் ஏம்மா இப்படி அடிக்கனும்? உனக்கு வலிக்குதுன்னு தெரியாதா?’ என்று அந்த இளங் குரல் வினவியது. -

'என் தலைவிதி யப்பா, தலைவிதி! அந்தப்பாளுஞ் சாமி என்னேக் கொண்டுபோக மாட்டேங்குது' என்றது பெண் குரல்.

'அப்பன் இப்படியே அடிச்சா அப்புறம் நாம் என்ன பண்றதம்மா? -

'என்ன பண்றது? பட்டுக் கொள்ளத்தான்் வேணும்.” - "எங்கேயாவது ஓடிப் போயிடலாமே.” சே? அப்படிச் சொல்லாதே, கண்ணு; நீ தாங்கு.”

'எனக்குத் துரக்கம் வல்லே, பண்ணைக்காரர் கிட்டே சொல்லி அப்பனை மெரட்டச் சொல்லேன்.” "அதெல்லாம் முடியாதப்பா; சாமி மனசு வச்சா முடியும். இல்லாட்டி இப்படியே செத்துப் போக வேண்டியதுதான்்.”

சிறிது நேரம் பேச்சில்லை; மெளனம் நிலவியது. மறுபடியும் அந்த இளங் குரல் அம்மெளனத்தைக் கலைத்தது. -

'சாமி எங்கே அம்மா இருக்குது? அது எப்படி அம்மா மனசு வைக்கும்?”

"அதோ அந்தக் குடியானத் தெருவிலே கோவில் இருக்குதே, அதிலே இருக்குது சாமி, கறுப்பண்ண சாமி. அங்தச் சாமியை வேண்டிக்கிட்டா, அது மனசு வச்சாலும் வெக்கலாம்.”