பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிகாரச் சாமி 129

'கான் வேண்டிக்கறேன்: சாe, கறுப்பண்ண சாமீ! எங்கப்பனே நீ கல்லா அடிக்கணும். அம்மாவை அடிச்சாக்கக் கொன்னுடுவேன்னு சொல்லனும், சாமீ! எங்கம்மாவை அப்பன் அடிச்சால் வலிக்காமல் இருக்கணும்.”

பெண் குரலில் சோகம் கிரம்பி யிருந்தது மாறிக் களுக்கென்று சிரிப்பின் ஒலி கேட்டது. மறுபடியும் அழுகைக் குரல்.

泳 来 米

சேலம் ஜில்லாவில் ராசிபாளையம் ஒரு சிறு

கிராமம். அங்கே குடியானவர்களுடைய வீடு அதிகம்; ஒரு பள்ளத்தெருவும் சிறிய பறைத் தெருவும் தனியே

இருக்தன. பள்ளத் தெருவிலே இருந்த குடிசை யிலேதான்் இங்தக் குரல்கள் கேட்டன.

மாரியாயி கல்ல பெண். அவள் புருஷன் காத்தான்ும் கல்லவகைத்தான்் இருந்தான்். அக்தக் குழந்தை முனியன் பிறக்கிற வரையிலும் அவன் வீட்டிலே சந்தோஷமும் அமைதியும் பொங்கின. முனியன் பிறந்த ஒரு வருஷத்திலே காத்தான்் கெட்டுப் போனன். கள்ளரக்கனுடைய மாய வலையிலே அவன் சிக்கிக்கொண்டான். வர வர அவனுக்கேற்ற ஜமாக்கள் சேர்ந்தன. நாள் முழுவதும் உழைத்து விட்டு வந்து ஆனந்தமாகக் குடிசையிலே புகுந்து மாரியாயி காய்ச்சி வைத்த சோற்றைக் குடித்துச் சுவர்க்க இன்பத்தை அனுபவித்த அவன் வாழ்வு காசமாயிற்று.

9