பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கலைஞன் தியாகம்

இந்தப் பாழும் குடி அந்தக் குடிசையின் சுக வாழ்வைக் குலைத்துவிட்டது. முனியன் வளர வளர அந்தக் குடும்பத்திலே துயரமும் வளர்ந்து வந்தது. முனியன் சிறு குழந்தையாக இருக்கும்போது இந்த விஷயமொன்றும் அவன் மன சில் படவில்லை. அவனுக்கு மூன்று வயது கடக்கும்போதுதான்் மாரியாயி ஜுரத்தின் வாய்ப்பட்டாள். அது முதல் அவளுடைய பழைய வலிமை குன்றிவிட்டது. அது வரையில் காத்தான்ேடு எதிர்த்து வாதாடி அவன் கொடுத்த உதைகளே அவள் உடம்பு தாங்கி வந்தது. இப்போதோ, அவளால் அவற்றைத் தாங்க முடிவதில்லை. அவள் அவனேக் கண்டித்துக் கண்டித்து அலுத்து விட்டாள். ஆனாலும் அந்தக் குடிகாரன் காரண்மில்லாமல் அவளே அடித்து வந்தான்். வாரத் திற்குக் குறைந்த பசும் ஒரு முறையாவது இந்தப் பூசை நடவாமல் இராது.

முனியனுக்கு இப்போது ஐந்து வயது. அவன் மனசில் தன் தகப்பனின் கொடுமை உ று த் த த் தொடங்கியது. தாயின் பரிதாப நிலை அவ ன் ங்ெஞ்சை உருக்கியது. அந்த இளங்குழங்தை என்ன செய்வான் பரிகாரம் ஒன்றும் தோன்ருமல் மறு கினன். அவனுக்குக்கூடச் சில் சமயங்களில் உதை யிலே பங்கு கிடைக்கும்.

- கறுப்பண்ண சாமியை வேண்டிக்கொண்டால் ஏதாவது வழி பிறக்கலாமென்று அம்மா சொன்னதை அவன் உண்மையாகவே நம்பினன். முன் காலத் தில் துருவன்கூடத் தன் மாற்ருங் தாய் பேச்சை