பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிகாரச் சாமி 131

கம்பித்தான்ே நன்மை அடைந்தான்்? தவம் செய்யப் போனன்? -

முனியனுக்கு அன்றுமுதல் கறுப் பண்ணசாமி மேலேதான்் ஞாபகம்; சாமி, எங்கப்பன் எங் கம்மாவை அடித்தால் அந்தக் கையை நீ வெட்டி விடேன். எங்கம்மாவுக்குப் பக்கத்திலே நீ வந்து கின்று தடுத்துவிடப்படாதா?’ எ ன் றெ ல் லாம் வேண்டிக்கொள்வான். பாவம் குழந்தையின் ஆஹ் லாதத்தைக் கறுப்பண்ணசாமி அறிந்தாரோ, என் னவோ!

来源 米 米

கறுப்பண்ணசாமி மனசு வைத்ததாகத் தெரிய வில்லை. காத்தான்ுக்குக் கள்வெறி அதிகப்பட்டு வந்ததேயொழியக் குறையவில்லை; ‘சாமீ, நான் வேண்டிக்கறது உனக்குக் கேக்கலையா? நீ செவிடா?” என்று முனியன் அழுதான்்; அப்பனே கினேந்து பல்லேக் கடித்தான்். -

மறுநாள் தீபாவளி. மாரியாயி புல்விற்ற காசில் கொஞ்சம் சேர்த்து வைத்துத் தீபாவளிக்கு ஒரு சாயத்துண்டு வாங்கலாமென்று எண்ணியிருந்தாள். 'தம்பி, உனக்குச் சாயவேட்டி வாங்கியாரேன்; கட்டிக்கறயா?" என்று குது.ாகலத்தோடு அவள் தன் மகனேக் கேட்டாள். - - - கல்லாக் கட்டிப்பேன்' என்று சொல் லி க் கொண்டே, எங்கம்மா சாயவேட்டி வாங்கப் போவுது” என்று தன்னுடைய தோழர்களுக்கு டமா ரம் அடிக்கப் போய்விட்டான். - - -