பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கலைஞன் தியாகம்

உருவாக்கிக் கண்ணுக்குக் காட்டின. கிழவனுடைய கற்பனை உருவங்கள் முருகனது கையிலிருந்து உண்மையான உருவங்களாக வெளிப்பட்டன: கிழவன் நினைத்தான்்; அதை முருகன் செய்தான். இத்தகையவனேக் கிழவன் தன் உயிரைப் போலப் பாவித்து அன்புசெய்தானென்றால் அது யாருடைய குற்றம்? இதெல்லாம் பொறாமைத் தீயின் புகையினால் மங்கியிருந்த கிருஷ்ணபிள்ளையவர்களுடைய கண்களுக்குப் புலனாகவில்லை.


2

வராத்திரி நெருங்கிக் கொண்டிருந்தது. நாராயண பிள்ளையின் வீட்டுப்பொம்மைகள் அதிகமாகச் செலவாயின. முருகன் செய்த பொம்மைகளுக்கு அதிக விலை கிடைத்தது. சென்னபட்டணத்திலிருந்து மொத்தமாக ஐந்நூறு ரூபாய்க்கு ‘ஆர்டர்’ வந்தது. அந்த வீட்டில் உள்ள யாவரும் முயன்று வேலைசெய்து வேண்டிய பொம்மைகளைச் செய்தார்கள். கிழவன்கூட இருமிக்கொண்டே தன்னால் இயன்றதைச் செய்தான். முருகனும் செய்தானென்று சொல்வது மிகை. கிருஷ்ணபிள்ளை அதிகமாக வேலைசெய்தானென்று சொல்வதற்கில்லை; வேலை வாங்கினானென்றுதான் சொல்ல வேண்டும். கிழவனைக்கூட முடுக்கினன். “பணம் வரும்போது வேலை செய்தால் அப்புறம் ஒய்வு கிடைக்கும்” என்று சொல்லிச் சொல்லி வேலை வாங்கினன்.

பொம்மைகளையெல்லாம் பெட்டிகளில் நன்றாக அடக்கம் செய்து ரெயில்வே ஸ்டேஷனுக்குக்