பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிகாரச் சாமி 133

அங்த ராக்ஷஸன் போய்விட்டான். குழங்தை தாயருகில் வந்தான்். அலங்கோலமாகக் கீழே கிடங்த தாயின் முகத்தருகில் தன் முகத்தை வைததுக் கொண்டு விம்மி விம்மி அழுதான்். தாயும் அழுதாள். அன்றைத் தீபாவளி தாயின் அழுகையாகிய சுருதி யிலே கலந்து இசைத்த அந்த இளங் குழந்தையின் அழுகை யென்னும் சோக சங்கீதத்திலே கழிந்தது.

米 米 米

முனியனுக்கு அப்பன் மேலே கோபம் வந்த தோடு, இப்போது சாமிமீதும் கோபம் வந்தது. ‘அங்தக் கறுப்பண்ண சாமியை கேரிலே போய்ப் பார்த்துச் சொல்லிவிட்டு வரலாம் என்று எண்ணி ன்ை. தீபாவளிக் கொண்டாட்டக் கூட்டத்தோடு கலந்து கறுப்பண்ணசாமி கோயிலுக்குள்ளே நுழைங் தான்். அங்கே ஏக ஆரவாரம். சாமிக்குப் படையல் படைத்திருந்தார்கள்: எத்தனையோ விதமான பழங் கள், இளர்ேக் குலைகள், சோற்று வகைகள், ஆடு, கோழி முதலியவை; எல்லாம் முனியனுக்கு ஆச்சரி யத்தை உண்டாக்கின. இந்தச் சாமி ரொம்பப் பெரிய சாமிபோலே இருக்குது. இத்தனே சோறும் இது தின்னுப் பிடும்ன இது எத்தனே பெரிசா இருக்கணும் அங்குள்ள காட்சிகளிலே அந்தக் குழங்தையுள்ளம் லயித்து கின்றது. அரை மணி கேரம் அவன் கண்கள் அங்குள்ள பொருள்கள் ஒவ்வொன்றின் மேலும் சென்றன. சாமியின் அலங் காரத்திலும் சென்றது. -

சட்டென்று முனியன் பார்வை ஒரு பதார்த் தத்திலே சென்று கின்று விட்டது. அவன் ஊன்றிக்