பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கலைஞன் தியாகம்

கவனித்தான்்; கண்ணத் துடைத்துத் துடைத்துப் பார்த்தான்், ஆமாம், கள்ளுத்தான்்; அப்பன் குடிக்கிற கள்ளுத்தான்். அவன் தன் அப்பன் சில நாள் குப்பி யிலே கொண்டு வந்த கள்ளைப் பார்த்திருக்கிருன்; அதன் நாற்றத்தைக்கூட அவன் அறிந்திருக்கிருன்.

கறுப்பண்ண சாமிக்கு உரிய நைவேத்தியவகை களுக்கு இடையில் கள் நிறைத்த குப்பிகள் பல இருந்தன. அவற்றைக் கண்டபோதுதான்் முனியன் உள்ளம் திடுக்கிட்டது. "ஐயோ! கள்!” என்று கத்தி விட்டான். கள்ளின் காட்சியிலே அவன் தன் தகப்பனின் கொடுமைகளை யெல்லாம் கண்டான்.

அந்தக் கீக்சுக் குரல் கணிரென்று அருகிலிருந்த வர்கள் காதில் விழவே அவர்கள் முனியன் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களில் ஒரு வ ன், "அடே, இந்தப் பள்ளப் பயல் இங்கே எங்கேயடா. வங்தான்்? உதையடா; பிடியடா’ என்று கத்தின்ை. ஐந்து நிமிஷத்தில் பலர் வீராவேசத்துடன் ஆளுக்கு ஒரு பக்கம் அந்தக் குழந்தையைச் சூழ்ந்துகொண்டு. அடிக்கத்தொடங்கினர். முனியன் மூர்ச்சையாகி விட்டான். * * : *

'இந்த நாயைத் தூக்கி வெளியிலே எறியுங்கள். தீவிளி நாளிலே இந்தக் களுதை கோயிலைத் தீட்டுப் பண்ணிவிட்டது” என்று முழங்கினர்கள் சிலர்.

முனியன் குற்றுயிரும் குலையுயிருமாகச் சில ஹரி ஜனங்களால் கோயில் வாயிலிலிருந்து துரக்கிச் செல். லப்பட்டான். புருஷனல் உதைக்கப்பட்ட மாரியாயிக் குப் பக்கத்தில் அவனைப் போட்டுவிட்டு, கடந்ததைச் சொன்னர்கள். - - -