பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிகாரச் சாமி 135

'அட பாவி மவனே! இப்படியா செய்தாய்!” என்று அவள் அரற்றினுள்; சிறுவனே ஆசுவாசப் படுத்தினுள்; 'சாமீ, உனக்குக் கண்ணில்லையா? அறியாக் கொளங்தையைக் கொன்னுட்டார்களே” என்று பிரலாபித்தாள்; முனியா, என் கண்ணே!' என்று புலம்பி உருகினள்.

முனியன் கண்ணேத் திறந்தான்். அவன் வாயிலே தண்ணிரை வார்த்தாள். இரண்டு மிடறு குடித் தான்். 'அம்மா, கறுப்பண்ண சாமியை கம்பாதே நீ' என்று மெலிந்த குரலிலே அவன் சொல்லிவிட்டு நாலு பக்கமும் பார்த்தான்். அவனுக்கு உள்ளத் திலே தோன்றிய பயம் இன்னும் நீங்கவில்லை.

'அப்படிச் சொல்லாதே, தம்பி; அந்தச் சாமி தான்் உன்னே இவ்வளவாவது இருக்கப் பண்ணிச்சு' என்று அவள் அழுதாள். - -

'பொய் அம்மா, பொய்; அந்தச் சாமி கெட்ட சாமி. அதுகூடக் கள்ளுக் குடிக்குது. நான் கண் ணுலே பார்த்தேன். இங்கே அப்பன் கள்ளுக் குடிக் குது; உன்னே அடிக்குது. அங்கே சாமிகூடக் கள்ளுக் குடிக்குது; என்னேயும் அடிக்கப் பண்ணிச்சு. அந்தச் சாமி வேண்டாம், அம்மா.” - . -

'இல்லை, கண்ணு; அப்படிச் சொல்லாதே; அவங்க அடிச்சால் அதுக்குச் சாமி என்ன பண்ணும்?”

"அந்தச் சாமி பின்னே என் கள்ளுக் குடிக்க வேனும்? சோறு போதாதா? பளம் போதாதா? அத்தனே புட்டி கள்ளைக் குடிக்கற சாமிகிட்ட அப்பனைப் பத்திச் சொன்ன அது கேக்குமா? என்ன