பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கலைஞன் தியாகம்

எதுக்கு அடிச்சாங்க? அங்தக் குடிகாரச் சாமி சொல்லித்தான்ே?” -

மாரியாயிக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. அவள் அழுதாள். 'சாமி, தோன் காப்பாத்தனும்” என்று மறுபடியும் கறுப்பண்ண சாமியைத்தான்் வேண்டிக் கொள்ளலாளுள்.

f „^ 2 སྣ་བེད་”

மறு வருஷம் சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு அமுலுக்கு வந்துவிட்டது. கிராமத்திலுள்ள ஜனங்க ளெல்லாம் குடியை மெல்ல மெல்ல மறக்கத் தொடங் கினர்கள். கள்ளு வாங்கி வைக்கும் கலயங்கள் இப்போது குடிசைகளிலே இல்லை; ஏழைகள் அன்றன்று சேர்த்து வைக்கும் காசுகளேச் சேமிக்கும் கலயங்களே இருந்தன. இந்த யுகப் புரட்சியிலே ராசிபாளையத்தில் மாரியாயியின் குடிசையிலும் ஒளி வீசத் தொடங்கியது. காத்தான்் மதுவிலக்கு வந்த புதிதில் சில காலம் வெறிபிடித்தவனைப் போல இருந்தான்். பிறகு வர வரத் தெளிவடைந்தான்். முன்பு தான்் செய்த அட்டுழியங்களே யெல்லாம் கினேக்கும்போது அவனுக்கு அழுகை வந்தது; சாமீ, இந்த மட்டிலாவது காப்பாத்தினேயே’ என்று கடவுளே மனமாரத் தொழுதான்்.

மாரியா யியின் முகத்திலும் களை உண்டா யிற்று. 'கறுப்பண்ணசாமி கண் திறந்தார்; அதனல் நமக்கு விடிந்தது என்று அவள் நம்பினள். குழங்தை முனியன் இந்தப் புது மாறுதலே அறிந்து ஆச்சரியப் பட்டான். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. - -