பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிகாரச் சாமி 137

"ஏம்மா! இப்ப நம்ம அப்பன் கள்ளுக் குடிக்கிற தில்லையா? முன்னெப்போலே உன்னே அடிக்கிற தில்லையே? என்னெக் கண்டாத் தூக்கி வச்சுக்குதே' என்று தாயைக் கேட்டான்.

“இங்கே கள்ளுத் தண்ணி கெடைக்கிறதில்லே. கள்ளுக் குடிச்சாச் சர்க்கார் தண்டிப்பாங்க. அதேைல ஒருத்தரும் கள்ளுக் குடிக்கிறதில்லே.” - 'இப்படி யாரம்மா பண்ணினங்க?"

"எல்லாம் அந்தக் கறுப்பண்ணசாமிதான்், தம்பி.” 'அங்தக் குடிகாரச் சாமியா!' 'சே, அப்படிச் சொல்லாதே; பாவம்.” முனியனுக்குக் கறுப்பண்ண சாமி யி டம் கம்பிக்கை வரவேயில்லை; அவன் தாய்க்கோ அந்தச் சாமியிடம் நம்பிக்கை போகவேயில்லை.

米 米 米

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே கறுப் பண்ணசாமி கோயிலே ஹரிஜனங்களுக்குத் திறந்து விட்டார்கள். இந்த இரட்டிப்புச் சந்தோஷத்தைக் கேட்டு மாரியாயி ஆனந்தக் கடலில் மூழ்கினுள். அவள் இந்த வருஷமும் தம்பிக்கு ஒரு சாயத் துண்டு வாங்க வேண்டுமென்று பணம் சேர்த்திருந்தாள். அது அப்படியே இருந்தது. அது மட்டுமா? அவளுக்குத் தெரியாமல் காத்தான்்கூடச் சிறிது பணம் சேர்த்து வைத்திருந்தான்். தீவிளிக்குத் தம்பிக்கு நல்லதாச் சாயவேட்டி ஒண்னு வாங்கித் திடீர்னு கொண்டு வந்து அவங்களே ஆச்சரியப்படப் பண்ணனும்' என்று நினைத்தான்். தீபாவளிக்கு முதல் நாள் ஒரு வருக்கு ஒருவர் சொல்லாமல் குழங்தைக்கு மாரியாயி