பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கலைஞன் தியாகம்

ஒரு சாயத் துண்டு வாங்கிவந்தாள்; காத்தான்் ஒரு சாய வேட்டி வாங்கி வந்தான்். 4 தீபாவளியன்று முனியன் அந்த இரண்டையும் உடுத்துக் கொண்டான். அந்த அலங்காரத்தைக் கண்டு தாயும் தங்தையும் உள்ளம் பூரித்தார்கள். தேங்காய் பழம் வாங்கிக்கொண்டு முதல் முதலாகக் கறுப்பண்ணசாமி கோயிலுக்குப் புறப்பட்டார்கள். ஹரிஜனங்களாகிய தங்கள் மூதாதையர்களுக் கெல் லாம் கிடைக்காத ஒரு பாக்கியத்தைப் பெற்ற அவர்கள் நல்ல காளிலே அதை அனுபவிக்க வேண்டு மென்று எண்ணினர்கள். தீபாவளியைவிட நல்ல காள் ஏது? - .

எல்லோரும் கோவிலுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்தார்கள். எல்லோரும் சுவாமியைப் பார்க்கும்போது முனியன் கண்கள் அச்சக் குறிப் போடு சுவாமிக்கு முன்னே உள்ள நைவேத்தியங் களைப் பார்த்தன; குடிகாரச் சாமி யிடம் அவனுக்கு லேசிலே நம்பிக்கை பிறக்கவில்லை. இன்றும் யாரா வது அடிக்க வருவார்களோ என்று கூட அஞ்சின்ை. "இங்கே அது இல்லையே அம்மா?’ என்று அவன் கேட்டான். 2. - . -

'இல்லே யப்பா' என்ருள் தாய். 'ஏன் அம்மா?” - - . , எல்லாம் கறுப்பண்ண சாமி பண்ணினது அப்பா'

தீபாராதனேயைக் கண்டு யாவருடைய கைகளும் தலைமேல் குவிந்தன. முனியனும், கள்ளேயும் தான்் போன வருஷம் பட்ட அடியையும் மறந்து விட்டுக் கைகளைக் குவித்தான்். . . ."