பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 7

கொண்டுபோய்ப் பட்டணத்துக்கு அனுப்பின்ை. அவனோடு முருகனும் சென்றிருந்தான்். முருகனல் தனக்குப் பணலாப மென்பதை அன்று கன்ருக உணர்ந்த கிருஷ்ணனுக்குச் சிறிது உள்ளம் குளிர்ந்தது. 'தம்பி, உனக்குக் கல்யாணம் செய்ய வேண் டாமா?” என்று அவன் முருகனேக் கேட்டான்.

இந்தமாதிரியான இனிய மொழிகளே அவனிட மிருந்து முருகன் என்றும் எதிர்பார்த்ததே இல்லை. இவ்வார்த்தைகள் காதில் விழுந்தபோது ஏதோ அமுத மழை பொழிந்தது போல இருந்தது முருகனுக்கு. கல்யாணப் பேச்சுக்காக அவன் சந்தோஷிக்கவில்லை; தன் அண்ணன் என்றும் இல்லாதபடி அன்போடு பேசியதுதான்் அவன் மகிழ்ச்சிக்குக் காரணம்.

"அப்பன்கூட அடிக்கடி சொல்வதுண்டு, எங்கே யாவது கல்ல பெண்ணுகப் பார்த்துக் கட்ட வேண்டு மென்று' என்று கிருஷ்ணன் சொன்னன். -

முருகன் புன்னகையிலே காணத்தைக் கலந்து காடடினன.

ஸ்டேஷனிலிருந்து இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். மாலே வேளை. கடைவீதி வழியே வந்தார்கள். அப்பொழுது திடீரென்று, 'முருகா! முருகா! இவ்வளவு காலமாக உன்னே எங்கெங் கெல்லாம் தேடினேன்!” என்று ஒரு குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். கறுத்துப் போய் வற்றலாகியிருந்த தேகமும், சில செருப்புகளே வைத்திருந்த கைகளும், நீர்தோன்றித் ததும்பிக் கொண்டிருந்த கண்களும் உடைய உருவத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/15&oldid=686177" இலிருந்து மீள்விக்கப்பட்டது