பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலங்காயம் - 143

பெரிய கிழவன் சொல்லிவிட்டான். அப்புறம் சும்மா இருக்கலாமா? ஏய், உன் பேச்சை நிறுத்து. எங்கள் சாமியை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது' என்று கூட்டத்திலிருந்து ஒருவன் கூறினன். "ஏன்? நான் சொல்வதில் என்ன தப்பு: நான் உள்ளதைத்தான்ே சொல்கிறேன்? கல்லேயும் மண்ணே யும் செம்பையும் சாமியென்றால் சாமியாகிவிடுமா?

பெரிய கிழவனுக்கு ரோஷம் வந்துவிட்டது; 'ஏய்! நான் சொல்வதைக் கேள்: எங்கள் சாமி சக்தி உனக்குத் தெரியாது. எங்கள் மாரியாயிக்குக் குற்றம் செய்தால் அப்புறம் அதோகதிதான்், ஜாக்கிரதை' என்று பயமுறுத்தின்ை.

பாதிரி அந்த மிரட்டலுக்குப் பயங்தவராகத் தோற்றவில்லை; அந்தத் தெய்வம் என்னே என்ன செய்துவிடும்? அதைப்போல ஆயிரம் தெய்வங்களே கான் பார்த்திருக்கிறேன்' என்றார்.

'என்ன துணிச்சலடா, இந்தப் படுபாவிக்கு' என்று யாவரும் அச்சமும் வியப்பும் ஒருங்கே தோற்ற எண்ணினர்கள்.

"இங்தா; வீணுய்க் கெட்டுப் போகாதே. எங் கள் மாரியாயியின் கோபத்துக்கு ஆளாளுல் நீ பாழாய்ப் போவாய். பேசாமல் இன்றைக்கே இந்த ஊரை விட்டுப் போய்விடு' என்று எச்சரித்தான்் கிழவன். - . .

'எனக்கு உங்கள் மாரியாயியினல் என்ன வந்தாலும் வரட்டும். அந்த மாரியாயியின் சக்தி என்னிட்ம் பிரயோஜனப் படாவிட்டால் நீ கிறிஸ்து வன் ஆகிவிடுகிருயா?” என்று கேட்டார் பாதிரியார்.