பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலங்காயம் 145

காலாவது நாளே ஆலன் பாதிரி தண்டனையை அடைந்துவிட்டார்.

அன்று அவர் வழக்கம்போல் தம் மு. டைய கூடாரத்தில் படுத்துக் கொண்டிருந்தார். பாதி ராத்திரியில் யாரோ வாயில் துணி யடைப்பதாகவும் கைகளைக் கட்டுவதாகவும் ஏதோ ஒன்று உடம் பெல்லாம் ஊசி போலக் குத்துவதாகவும் உணர்ந்தார். திமிரிப் பார்த்தார். ஒன்றும் இயலவில்லை. உடம் பெல்லாம் ஊசிகளால் குத்துவதுபோல் இருந்தது. காலையில் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. உடம்பு முழுவதும் சிறு சிறு புண்கள்; ரத்தம் கசிந்துகொண் டிருந்தது. கட்டுக்களே யெல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு அவிழ்த்துக்கொண்டு கிராம முனிசிப்பிடம் ஓடினர்; ராத்திரி யாரோ சிலர் என் கூடாரத்துக்குள் நுழைந்து என் வாயில் துணியை அடைத்து உடம்பு முழுவதும் ஊசிகளால் குத்திவிட்டுப் போய்விட் டார்கள்' என்று அவர் புலம்பினர்.

கிராம முன்சீப் கிழவனிடம் பக்தியுடையவன். அவன் கிழவனுடைய விரதம் பலித்ததாகவே கருதி ன்ை. ஏகக் கூட்டம் கூடிவிட்டது. 'சாமியை வைதால் இப்படித்தான்் தண்டனை கிடைக்கும்” என்ருன் ஒருவன். 'மாரியாயி அல்லவா உடம் பெல்லாம் துளேத்துவிட்டாள்' என்ருன் மற்றொரு வன். இந்தக் கும்பலுக்கிடையே ஆலன் பாதிரியார் உடம்பு முழுதும் காயங்களோடு கின்றார். அவருக்கு அப்போதுதான்் முரடர்களே எதிர்ப்பதனல் என்ன விளையுமென்பது தெரிந்தது. பேசாமல் தம் பொருள்

10