பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கலைஞன் தியாகம்

களேச் சுருட்டிக்கொண்டு ரrகரை கினேத்தபடியே அந்த ஊரை விட்டுப் போய்விட்டார். - ஆலன் அந்த ஊரில் காயம் அடைந்தமையால் 'ஆலன்காயம் என்ற பெயர் அதற்கு வந்தது. அது வர வர மாறி 'ஆலங்காயம் ஆயிற்று.

米 米 - 米

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்தினவுடன் ராமசாமி, 'மாரியம்மன ஆலன் பாதிரியைத் தண் டித்தாள்?’ என்று கேட்டான்.

'மாரியம்மன் நேரே வரவில்லை. அவளுடைய பரம பக்தனுகிய கிழவனுடைய கனவில் உத்தரவிட் டாள். அந்தக் கிழவன் மூன்று தடியர்களே அழைத்து மாரியம்மன் கோயிலில் உள்ள ஊசிகள் அறைந்த பாதக்குறடுகளைக் கொடுத்து, நீங்கள் ஒருவருக்கும் தெரியாமல் இவைகளால் அங்தப் பாதிரியின் உடம்பு முழுதும் காயப்படுத்தி வரவேண்டும். இது சாமி யின் உத்தரவு. தவறினல் கம் குடும்பமே, 5ம் முடைய ஊரே காசமாகிவிடும். இந்த விஷயத்தை வெளியிலே சொன்னல் உங்கள் தலை வெடித்து விடும்; ஜாக்கிரதை' என்று எச்சரித்து அனுப்பி ன்ை. அவர்கள் அவ்வாறே செய்துவிட்டார்கள். மாரியம்மன் அந்தக் கிழவனுக்குப் பிரத்தியகடி மென்பது குழங்தை முதற்கொண்டு சந்தேகமின்றி கம்பிய சமாசாரம். ஆகவே அது மாரியாயியின் ஆக்ஞைதான்் என்பதில் அவர்களுக்குக் கடுகளவு கூடச் சங்தேகம் இல்லே. உனக்கு ஏதாவது உண் டாகிறதோ?’ என்றேன் கான், -