பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கலைஞன் தியாகம்

'நன்முக இருக்கிறது!’ என்று அம்மா சொல் வாள். அம்மாவுக்கு மேலே பெரியவர்கள் அவனுக்கு இல்லே. அதனல் அந்தத் தீர்ப்பைக் கேட்டு அவன் உள்ளம் பூரிப்பான்.

米 米 米

வேலன் பண்ணின பொம்மைகள்-அவனுக்கு அவை பொம்மைகளல்லவா?-காலங்து இருந்தன. ஒருங்ாள் அவன் தன் அம்மாவிடம் கொஞ்சலாகக் கேட்கத் தொடங்கினன்:

'ஏம்மா, நீ அங்தப் பொம்மைகளே வித்துட்டு வாயேன்.”

தாய்க்குச் சிறிது ஆச்சரியம் உண்டாயிற்று. 'உன் பொம்மையை வித்துக் காசு வாங்கறயே; இதையும் வித்துட்டு வாயேன்.” ஆகட்டும் கண்ணு.” 'எல்லாப் பொம்மையும் வித்துடுவையா?” 'விற்று விடலாம்! தம்பி.” - அவனுக்கு உண்டான சந்தோஷத்தை அப்போது பார்க்கவேண்டுமே!

அவன், தினந்தோறும் சாயங்காலம் அம்மா கடைவீதிக்குப் பொம்மைகளை விற்கக் கொண்டு போகும்போது தன் பொம்மைகளையும் விற்று விட்டு வரவேண்டுமென்று வற்புறுத்தினன். அவை களே எப்படி அவள் விற்பாள் ஏதேதோ சாக்குச் சொன்னாள். இப்படித் தாமதம் பண்ணி வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு ஒரு