பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரிப் பொம்மை 151

யோசனே தோன்றிற்று; ஏன் நாமே கொண்டுபோய் விற்கக் கூடாது?’ என்று எண்ணினான்

2

கடைவீதியில் மாலேயில் அந்தச் சிறு குழங்தை தன் கையில் ஒரு காய்ந்த மண் உருண்டையை வைத்துக்கொண்டு நின்றிருந்தான்். அதன்மேல் வர்ணங்கள் ஒழுங்கின்றிப் பூசப்பட்டிருந்தன. நவராத்திரி காலம். எவ்வளவோ பேர்கள் பொம்மை களே விற்றுக் கொண்டிருந்தார்கள். வேலன் ஒரு மூலேயில் கின்றுகொண்டிருந்தான்்.

'பொம்மை வாங்கலேயா பொம்மை பிள்ளையார் பொம்மை' என்று அவன் தன் மெல்லிய குரலில் கூவினன். யாராவது தெரிந்தவர்கள் கண்டுவிடப் போகிருர்களோ என்ற பயம் உள்ளே இருந்தது. பொம்மை வாங்க அங்கே வந்தவர்கள். அவன் கையில் உள்ளதைப் பார்த்தார்கள். அவர்களுக்குச் சிரிப்புத் தான்் வந்தது.

'இது என்ன பொம்மையப்பா?' என்று அவர்கள் கேட்பார்கள். வேலன் ஏதாவது சொல்லு வான். அதைக் கேட்டு அவர்கள் சிரித்துக்கொண்டே போய்விடுவார்கள். அவர்கள் சிரிப்பதன் அர்த்தம் அவனுக்குப் புரியாது. கம்முடைய அம்மாதான்் இது நல்ல பொம்மையென்று சொன்னளே; இதை ஏன் இவர்கள் வாங்கவில்லை? என்று அவன் எண்ணி ன்ை. உண்மைதான்்; அது அவனுக்கு கல்ல பொம்மை; அவன் அம்மாவுக்கும் அழகிய பொம்மை