உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கலைஞன் தியாகம்

ஒருவன் கின்ருன். அவன் ஒரு சக்கிலியன்; செருப்புத் தைத்து ஜீவனம் செய்கிறவன். பண்ணுருட்டிச் சேரியிலே ஒரு வருஷமாக வாழ்கிறவன். கிருஷ்ண னுக்கு அவன் சக்கிலியன் என்பது தெரியும். முருகனுக்குத் தெரியாது. .

தெரியாதென்று சொல்வதற்கில்லை. கிருஷ்ண பிள்ளையின் தம்பியாக வாழ்ந்த முருகனுக்குத் தெரியாதே யொழிய, அதற்கு முன் இருந்த முருகனுக்கு நன்ருகத் தெரியும். இவன் திருநெல் வேலிக்காரனென்பதை அவன் நெஞ்சு உணரும். -

இருவரும் நின்றுவிட்டார்கள். சக்கிவியன் ஓடிவந்தான்். முருகனுக்கு உடம்பில் கடுக்கம் உண்டாயிற்று. கிருஷ்ணனுக்கு ஒன்றுமே தோன்ற வில்லை. -

"ஐயோ! உன்னைப் பிரிந்த பிறகு உன் அம்மா உன்னே நினைந்து ஏங்கி உயிரை விட்டுவிட்டாளே! நீ என்னோடு இருந்தால் இந்த வயஸ்-காலத்தில் நான் இப்படிக் கஷ்டப்படுவேன' என்று அவன் தெலுங்கிலே கதறினன். அவன் வீட்டுப் பாஷை அது. இந்த நாடகக்காட்சியின் பொருள் கிருஷ்ண னுக்குப் புரியவேயில்லே, புரிந்தாலுங்கூட அதை அவனால் நம்ப முடியவில்லை. முருகன் அந்தச் சக்கிலியன் மகளு-?

'என்னடா உளறுகிருய்?’ என்று கிருஷ்ணன் அவனேக் கேட்டான். -

"ஐயோ சாமி, இவன் என் பிள்ளை. இவனுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன்! இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/16&oldid=686178" இலிருந்து மீள்விக்கப்பட்டது