பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கலைஞன் தியாகம்

தான்். மற்றவர் கண்களுக்கு அது அப்படித் தோன்ற வில்லையே!

கால் வலிக்க நின்றதுதான்் லாபம்; தொண்டை வலிக்கக் கத்தியும் பிரயோஜனம் இல்லை. அங்த ஏழைக் குழந்தையின் ஆசை நிறைவேறவில்லை. வக்த வர்களெல்லாம் அந்தக் குழங்தையின் கையிலுள்ள மண் உருண்டையைத்தான்் பார்த்தார்கள்; அதன் மேல் தெளித்திருக்த வர்ணக் குழம்பின் அவலக்ஷணங் தான்் அவர்கள் கண்ணிலே பட்டது. அந்தச் சிறு குழங்தை தன் முழு மனத்தையுஞ் செலுத்தித் தன் ஆர்வத்தை யெல்லாம் உருட்டி அதைச் செய்திருந்தா னென்று அவர்கள் உணரவில்லை. பாவம்! அவர்கள் சிரிக்கும்போதெல்லாம், அந்தக் குழங்தையின் உள். ளத்திலே ஓர் ஈட்டி பாய்ந்தது போல் இருக்கும்.

米 来 . 米

அவன் ஆசை கிறைவேருமல் ஏமாற்றத்தோடு வீடு திரும்ப இருந்தான்். அப்போது ஒரு கிழவர் அங்கே வந்தார். அவருடைய கண்கள் வேலன் கையிலிருந்த வஸ்துவை மேற் போக்காகப் பார்க்க வில்லை; ஊடுருவிப் பார்த்தன; 'இது என்ன தம்பி?” என்று அவர் கேட்டார். -

'பிள்ளேயார் பொம்மை; கான் பண்ணினது' என்று அழாக் குறையாக அவன் சொன்னன். அவ்வளவு கேரம் இந்த உலகத்தின் பரிகாச அலையிலே மோதுண்டிருந்த அவனுடைய உணர்ச்சி அப்போது சிறிதே வெளிவந்தது.

'அப்படியா என்ன விலே?”