பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154. கலைஞன் தியாகம்

"என் கண்ணே, உன் பொம்மையை வாங்கின வர் யார்?' என்று கேட்டாள்.

'யாரோ. தாத்தா வாங்கினர் அம்மா’ என்ருன் அவன்; 'காளேக்குக்கூடப் போய் வித்துட்டு வரப் போகிறேன்” என்று சொல்லி ஒரு குதி குதித்தான்்.

மறுநாள் மாலேயில் அவன் தான்் செய்த ராசா பொம்மையைக் கொண்டுபோனன். முதல் நாள் வங்த கிழவர் அன்றும் அந்தப் பொம்மையை வாங்கிக் கொண்டு சென்றார். அன்று குப்பம்மாள் தன் குழங்தை உண்மையிலேயே பொம்மையை விற்று விட்டுத்தான்் வருகிருனென்பதை உணர்க் தாள். இந்தக் குழந்தை கைராசியுடையவன். தன்னுடைய மண் உருண்டைக்கு நாலணு வாங்குகிற இவன் கம்முடைய அழகிய பொம்மைகளுக்கு நல்ல கிராக்கி கொண்டுவருவான் என்று அவளுடைய மனத்தில் ஓர் ஆசை உண்டாயிற்று. படிக்க வைக்கிறதையும் உத்தி யோகம் பார்க்கிறதையும் அப்போதைக்கு அவள் மறந்துவிட்டர்ள். தன் பொம்மைகளே அவன் சாயங் காலம் விற்கிறதும், வாங்குகிறவர்கள் அவனுக்காக நிறையப் பணம் கொடுக்கிறதும், அதனல் அவள் பணக்காரியாகிறதுமாகிய மனோராஜ்யத்தை அவள் சிருஷ்டி செய்தாள். . . . .

'தம்பி, நாளேக்கு நான் ஒரு பொம்மை தரு கிறேன். அதைக் கொண்டுபோய் விற்றுவிட்டு வா. அந்தக் கிழவருக்கே கொடு. நிறையக் காசு கிடைக் கும்” என்ருள் குப்பம்மாள். குழந்தை சம்மதித் தான்். . . - -