பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கலைஞன் தியாகம்

சில பையன்கள் பிடித்துக்கொள்வார்கள். சுப்ப ராயர் ஒரு சிமிட்டாப்பொடியை எடுத்து உறிஞ்சு வார். தம் செங்கோலாகிய பிரம்பை எடுத்துக் கொள்வார். பிறகு அவருடைய உத்ளாகத்தைப் பார்த்தால், 'தண்டிப்பதும் ஒரு கலை; ஆத்திரமில்லா மல் அவசரப் படாமல் நிதான்மாக முறைபிறழாமல் தண்டிப்பது ஒரு கலேதான்்' என்று தோன்றும்.

இந்த மாதிரியான தண்டனையை ஒரு முறை பெற்றவன் கங்தசாமி. அங்கே அவன் தகப்பனர் இரண்டு வருஷம் உத்தியோகத்தில் இருந்தார். மூன் ருவது நான்காவது வகுப்புகளே அவன் காவாப்பட்டிப் பள்ளிக்கூடத்தில் படித்தான்். நான்காம் வகுப்பில் படித்தபோதுதான்் . அந்தப் பிரப்பம்பழப் பூசை கடந்தது. அவனுடைய அப்பா சும்மா விடுவாரா? மேல் அதிகாரிகளுக்கு எழுதினர். கடைசியில், பாவம் சுப்பராயரை அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து மாற்றித் தாலூகாவில் ஒரு மூலையில் உள்ள பள்ளிக் கூடத்தில் ஒர் உதவி உபாத்தியாயராக நியமித்து விட்டார்கள். . . . .

சுப்பராயர் அதன்பிறகு தம் செங்கோலே அதிக மாகப் பிரயோகிப்பதில்லை. ஆனாலும் கண்ணுக்குக் கண்ணுடியும் மூக்குக்குப் பொடியும் எவ்வளவு அவசியமாக இருந்தனவோ அவ்வளவு அவசியமாக அவர் கைக்குப் பிரம்பு இருந்தது. அதை அவர் கையில் வைத்துக்கொள்ளாவிட்டால் ஒன்றும் ஓடாது. தலைமை உபாத்தியாயர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். சுப்பராயர் சில நாள் பிரம்பைத் தொடாமல் இருந்தார். ஆனாலும் பென்ஸிலேயாவது