பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கலைஞன் தியாகம்

தரிசனம் - இந்தமாதிரி வயசான மனிதர்களுடைய கவனத்துக்குப் பாத்திரமான விஷயங்களெல்லாம் அங்கே பொருந்தியிருந்தன. -

இந்தச் சந்தோஷ வாழ்விலே கலக்கத்தை உண்டு பண்ணக் கந்தசாமி பிள்ளே வந்து சேர்ந்தார். இப்பொழுது அவர் கந்தசாமி அல்ல; கந்தசாமி பிள்ளை; அவர் ஸ்கூல் பைனல் பரீகூைடியில் சிறப் பாகத் தேறி டிரெயினிங் பரீrை கொடுத்து அதில் மாகாணத்திலேயே முதல்வராகி நின்றவர். சேலம் ஜில்லாவில் எடுத்தவுடனே ஒரு பெரிய பள்ளிக் கூடத்தில் வேலே கிடைத்தது. இர ண் டா வ து வருஷமே மோகனூர்ப் பாடசாலைக்குத் தலைமை உபாத்தியாயராக வந்து சேர்ந்தார்.

米 米 来 공

‘இவர் அதே சுப்பராயர்தாம்” என்று கந்தசாமி பிள்ளை அறிந்துகொண்டார். -

‘இவன் அதே கந்தசாமிதான்்” என்று சுப்பராயர் தெரிந்து கொண்டார்.

அட படுபாவி! நீ எங்கேயடா வந்து சேர்ந்தாய்! இந்த இடத்திலே செளக்கியமாக இருக்கலாமென்று எண்ணியிருந்தோமே. இவன்கீழ் நாம் வேலை பார்ப் பதைவிட காக்கைப் பிடுங்கிச் செத்துப்போகலாமே; சீ சீ உத்தியோகம் அடிமை வாழ்வு. ஈசுவரா! என்னே இந்த கிலேமைக்குக் கொண்டு வரவா இந்த ஊருக்கு அழைத்து வந்தாய்? என்று அவர் அங்கலாய்த்தார். அவ்வூரில் உள்ள காந்தமலே யென்னும் குன்றில் எழுந்தருளியிருக்கும் நீ சுப்பிரமணிய ஸ்வாமியைப்