பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது மட்டுமா? 163

திரத்தை விட்டு வந்த சுப்பராயருக்கு அவருடைய பழக்கம் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

ஆனால்.........? - இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் திடீ ரென்று நாராயணயர் மாரடைப்பினால் இறந்து விட்டார். சரி, கமக்குத்தான்் தலைமைப்பதவி கிடைக்கும். இன்னும் இரண்டு வருஷமோ மூன்று வருஷமோ வேலேயில் இருக்கப் போகிருேம். அதற் குள் ஒரு தடவை இதைப்போன்ற பெரிய பள்ளிக் கூடத்தில் ஹெட்மாஸ்டராக இருந்து அங் த க் கெளரவத்தோடே ஒய்வெடுத்துக் கொள்ளலாம்: என்று எண்ணினர். ஒரு வாரம் அவர் ஆக்டிங் ஹெட்மாஸ்ட'ராகக்கூட இருந்தார். -

அடுத்த வாரம் திங்கட்கிழமை வந்தது. ஒரு புதிய ஹெட்மாஸ்டர் ஜில்லா போர்டர்ரிடமிருந்து தமக்கு ஒன்றும், அந்த ஆக்டிங் ஹெட்மாஸ்டருக்கு மற்ருென்றுமாக இரண்டு உத்தரவுகளேப் பெற்று வந்தார். எதிர்பாராத விதமாக நாராயணயர் காலமாகி விட்டபடியால் இந்த ஏற்பாட்டை ஜில்லா போர்டார் அவசர அவசரமாகச் செய்தார்கள். புதிய ஹெட்மாஸ்டராக அனுப்ப எண்ணியவரை கேரே வருவித்து உத்தரவுகளையும் கையிலே கொடுத்து விட்டார்கள். -

சுப்பராயர் ஆசையில் மண் விழுந்தது. அது மட்டுமா? - கிமிர்ந்து பார்த்தார். அந்தப் புது ஹெட் மாஸ்டர் யார் தெரியுமா? சாrாத் கங்தசாமிதான்். அவர் கைப்பிரம்பின் தழும்பு பட்ட அவனேதான்்!