பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமைப் பலி 165

ஆச்சரியம் மட்டும் அன்று; அதற்குமேல் மற்ருேர் உணர்ச்சி அவள் இதயத்தில் உண்டாயிற்று. அவள் தன் மாமன் வீட்டிற்குப் போவதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. தன் மாமன் மகனேடு சம்பாஷிப்பதையும், தன் மாமன் மனேவியிடம் தான்் கற்ற பாட்டுக்களைப் பாடிக் காட்டுவதையும் விசாகை மிக்க சங்தோஷகரமான செயல்களாகவே கருதினுள். ஆனாலும் அதற்கு மேற்பட்ட சந்தோஷத்தைத் தரும் காரியம் ஒன்று இருந்தது. w

விசாகையின் மாமனுக்கு ஒரு மகன் இருந்தான்். அவன் பெயர் தருமதத்தனென்பது. வியாபாரத் துறையில் சலியாத முயற்சியும் நல்ல அழகும் அறி வும் அவனிடம் இருந்தன. விசாகைக்கு அவன்பால் காதல் உண்டாயிற்று. அவனும் அதை உணர்ந்தான்். அவளேக் காதலித்தான்். இருவருடைய காதலும் வளர்ந்து வந்தன. உலகத்தோர்முன் கல்யாணக் கோலத்தில் வெளிப்படும் காலத்தை அவ்விரண்டு இளங் காதலர்களும் எதிர்பார்த்திருந்தனர். விசாகை தருமதத்தனைப் பார்ப்பதிலும் பேசுவதிலும் இன்பம் கண்டாள். அதல்ை அடிக்கடி மாமன் மனே சென்று வங்தாள். - - அவ்விருவரும் காதல் கொண்டுள்ளதை இரண்டு குடும்பத்தினரும் அறிவார்கள். ஆதலின் அவர்கள் காதல் இடையூறின்றி விருத்தியாயிற்று. அது நிறை வேறுவதற்கு இம்மியளவேனும் தடையில்லை.

இந்த நிலையில் தன் வருங்கால வாழ்க்கையைப் பற்றிக் கற்பனை எவ்வளவுதூரம் செல்லுமோ அவ் வளவுதுாரம் செல்லவிட்டுக் கனவு கண்ட விசாகைக்