பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கலைஞன் தியாகம்

குத் தன் தங்தையார் போட்ட உத்தரவு இடி இடித்த மாதிரி இருந்தது. . -

'ஏன் அப்பா!' என்று கடுங்கிக்கொண்டே கேட் டாள் விசாகை.

'கம்முடைய குடும்பத்தில் நம் முன்னேர்கள் எவ் வளவோ மானமாக வாழ்ந்து வந்தார்கள். பழி வந்தால் உயிரைக்கூட விட்டுவிடுவார்கள். இந்தக் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குடிக்கெல்லாம் நாயகமாக நம் குடும்பம் விளங்கிவருகிறது. யாதொரு மாசு மறுவும் இன்றிப் பூர்ண சந்திரனைப்போல விளங்கிவரும் இந்தக் குடிப்பெருமைக்கு என் காலத் தில் பழி வரவே கூடாது.”

தன் தகப்பனரா இப்படிப் பேசுகிருரென்று விசாகை எண்ணிள்ை. இதென்ன! பழி, குடிப் பெருமைக்கு மாசு-இவைகளெல்லாம் நான் ஒரு காலும் கேளாத வார்த்தைகள்' என்று அவள் மனங் குழம்பினள். . .

'நான் தீர யோசித்துத்தான்் சொல்கிறேன். நீ உன் மாமன் வீட்டிற்குப் போவதை அடியோடு நிறுத்திவிட்டாற்கூட நல்லது” என்று மறுபடியும் தகப்பனர் கூறினர். . . . -

"அப்படியே செய்கிறேன்; ஆனால் நீங்கள் பழி யென்றும் குடிப்பெருமைக்குக் கேடென்றும் என் னவோ கூறினர்கள். நீங்கள் இவ்வாறு சொல்வ. தற்கு என்ன காரணம் என்று எனக்கு விளங்க வில்லையே." . . . . . . . . . . .

'குழந்தாய், நீ அதைப்பற்றிக் கவலைப்படவேண் டாம். கம்மேற் குற்றம் இல்லாவிட்டாலும் உலகம்