பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கலைஞன் தியாகம்

பெண்பிள்ளைகளுக்கு இவ்வளவு சுதந்திரம் தந்துவிட்டால் அப்புறம் மானம் மரியாதை எல்லாம் அதோகதிதான்்” என்று சிலர் வம்பளங்தார்கள்.

'யார் என்ன கண்டார்கள்? விசாகை இன்னும் கன்னித்தன்மை கெடாமலே இருக்கிருளென்பது என்ன நிச்சயம்?” என்றுகூடச் சிலர் பேசினர்கள்.

இந்தப் பேச்சுக்களில் சில காற்றுவாக்கில் விசா கையின் தகப்பனர் காதிலே பட்டன. மானமிழந்த பின் வாழ அறியாத குலத்திற் பிறந்த அவருக்கு அவை மனக்கலக்கத்தை உண்டாக்கின.

2

"விசாகை கன்னிமாடம் புகுந்தாள்' என்பதே காவிரிப்பூம் பட்டின முழுவதும் பேச்சு.

'அடடா என்ன உத்தமமான பெண்! அவளைப் போய் எங்தப் பாவியோ அடாது சொன்னுளுமே! அவன் காக்குப் புழுத்துத்தான்் போகும்” என்றார்கள் சிலர்.

விசாகை தன் குலத்தின் பெருமையை கிரூபிக் கும் பொருட்டு வாழ்வு முழுவதும் கன்னியாகவே இருக்கும் விரதத்தைப் பூண்டு கொண்டாள். யாராரோ தடுத்துப் பார்த்தார்கள். 'என்னுடைய காதல் சிறந்தது. அது இந்த உடம்பைமட்டும் பொறுத்ததன்று. தருமதத்தன் என் கா த ல ன். அவன்பால் உள்ள என் காதல் உயிரோடு சம்பந்த முடையது. அது பிறவிதோறும் தொடரும். இங் தப் பிறவியிலே நாங்கள் கணவன் மனைவியராக