பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமைப் பலி 169

வாழாவிட்டாலும் அடுத்த பிறவியிலே காங்கள் பிரிவின்றி வாழ்வோம். இந்த உறுதி எனக்கு உண்டு. என்னுடைய காதல் வயிரம் போன்ற தென்பதை இந்த உலகம் அறியட்டும். என் வாழ்வு முழுவதும் கன்னியாகவே இருப்பேன்’ என்று அவள் சபதம் பூண்டாள். :

பீஷ்மன் தன் தந்தையின் சுகத்தின் பொருட் டுப் பிரமசரிய விரதம் பூண்டானென்று கேட்டிருக் கிருேம். தன் குடிப்பெருமையைக் காட்ட இவ்வாறு விரதம் பூணும் வீரமகளைப்பற்றி காம் கேட்ட தில்லை. விசாகை வாழ்க!' என்று நல்லோர் வாழ்த் திர்ைகள்.

விசாகை காவிரிப்பூம்பட்டினத்தில் புத்ததேவன் திருக்கோயிலுக்கருகில் உள்ள கன்னிமாடத்தில் புகுங் தாள்.

தருமதத்தன் இதை உணர்ந்தான்். தன் காதலி யின் வீர சபதம் அவனுக்குப் பெருமையைத் தந்தது. ஆணுலும் சொல்லமுடியாத வேதனே ஒன்று அவன் மனத்திலே குடிபுகுந்தது. இனிமேல் விசாகையைக் காணமுடியாதென்பதை எண்ணும்போது அவனுக்கு வாழ்க்கையிலேயே வெறுப்புத் தட்டியது. என்ன பைத்தியக்கார உலகம் கிடைத்தற்கரிய ஓர் இனிய அழகிய மலரைப் பயன்படாமல் வாடிப்போகும்படி யல்லவா செய்துவிட்டது!’ என்று பெருமூச்செறிக் தான்். இந்த ஊரிலே இருப்பதுகூடப் பாவம்' என்று அவனுக்குத் தோற்றியது. ஏன்? இந்தச் சோழநாட்டிலேகூட அடிவைக்கக் கூடாது என்று எண்ணினன். இந்த எண்ணமே அவன் மனத்தை