பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கலைஞன் தியாகம்

ஆட்கொண்டது. மிகவும் தீவிரமாக யோசித்தான்். கடைசியில் பாண்டிகாட்டுக்குப் போய் மதுரையிலே வாழ்வதென்று நிச்சயித்தான்். அவனும் வாழ்நாள் முழுவதையும் பிரமசாரியாகவே கழிக்கும் சபதத் தைப் பூண்டான். - - -

காவிரிப்பூம்பட்டினத்தைத் தொழுது துறந்து மதுரைக்குப் போனன். அவன் உள்ளம் மட்டும் விசாகையை மறக்கவில்லை. அவளது கன்னிக்கோலம் ஒரு தெய்வ விக்கிரகம்போல் அவனது இருதயத் தாமரையிலே இடங்கொண்டது. அதை அவன் காள்தோறும் அன்பு மலரால் பூஜித்து வந்தான்்.

மதுரையில் அவன் தன் தொழிலே நடத்தத் தொடங்கினன். அறிவாளி எந்தத் தீவாந்தரத்தில் இருந்தால்தான்் என்ன? புகழும் பெருமையும் அவன் இருக்குமிடம் தேடிவந்து அடைகின்றன. தருமதத் தன் மதுரை வணிகர்களுக்குள் முக்கியமானவன் ஆனன். திருமகள் கடா கூத்தை நிரம்பப் பெற்ருன். அவனுடைய செல்வாக்குப் பெருகியது; புகழ் பரவியது. பாண்டிய மன்னன் அவனுக்கு எட்டி என்னும் பட்டம் அளித்துப் பாராட்டினன். ஆனாலும் அவன் மாத்திரம் திருப்தியை அடையவில்லை. தாமரை இலைத் தண்ணின்ரப்போல் அவன் வாழ்ந்து வந்தான்். பணமும், புகழும், மதிப்பும் அவனுக்குத் திருணமாகத் தோற்றின.

விசாகையோ தன் உள்ளத்துள்ள்ே தரும தத்தன வைத்துப் பூஜித்து வந்தாள்; புறத்தே புத்த தேவனைப் பூஜித்து வந்தாள். காவிரிப்பூம்பட்டின. வாசிகளுக்கு அவள் தெய்வமாகி விட்டாள்.