பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமைப் பலி 171

அவளுடைய கன்னி விரதம் அவளுடைய மதிப்பை ஆயிரம் பங்கு உயர்த்தி விட்டது."விசாகை யென்றால் தூய்மைக்கு அறிகுறி; விரதத்தின் உருவம்; வீர விளக்கு என்று காவிரிப்பூம்பட்டினத்தார் அவளைப் போற்றினர்கள்.

3

ஒன்று, இரண்டு, மூன்று-பத்து, இருபது முப்பது, காற்பது வருஷங்களாகிவிட்டன. வீரப்பிரம சாரியாகிய தருமதத்தனுக்கு இப்பொழுது அறுபது வயது. அவன் மதுரையில் ஒரு திலகம்போல விளங் கின்ை. அறுபது வயது முடிந்த காலத்தில் அவ னுடைய செல்வம் பெருகி விட்டது. அவன் இளமை தளர்ந்தது. ஆயினும் உள்ளக் கோயிலில் உள்ள காதலும் காதலியின் உருவமும் அன்றுபோல இன் றும் வாடா இளமையோடு இருந்தன.

விசாகை கிழவியாகி விட்டாள். அவள் மயிர் கரைத்து விட்டது. கன்னிக் கோலத்தில் அவள் பழுத்து நின்ருள். .

  • - 来源 来源

இவ்வளவு செல்வத்தை இதுவரையில் ஈட்டி ைேம். இனிமேல் இதைக் கொண்டு தருமம் செய்வதே நம் கடமை என்று தருமதத்தன் கினைத் தான்். இனிமேல் காவிரிப்பூம்பட்டினம் செல்லலாம்: என்ற எண்ணம் உண்டாயிற்று. -

தருமதத்தன் தன் இருபதாம் பிராயத்தில் துறந்த தன் பிறப்பிடத்தை அறுபதாம் வயதில் வந்து மிதித்