பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமைப் பலி 173

இருவரும் சக்தித்தனர். ஒருவருடைய கண்கள் மற்றொருவருடைய கண்களேப் பருகின. காற்பது வருஷங்களாகக் கொண்ட தாகம் ஒரு கணத்திலே திருமா? பேசத்தான்் வாய் வருமா? -

அவர்கள் பார்வையில்ை, காற்பது வருஷங்களாக வளர்த்து வந்த விரதக் கனலின் சோதி ஒன்று பட்டது. சிறிது நேரம் மெளனத்திலே யாவரும் மூழ்கினர்.

'தத்தரே, மீண்டும் இந்த மண்ணை மிதிக்க உமக்கு மனம் வங்ததா?’ என்ருள் விசாகை.

'இனியும் கம்மைக் குறை கூறுவதற்கு இந்தக் காவிரிப்பூம்பட்டினம் அவ்வளவு முட்டாளாகவில்லை யென்ற நம்பிக்கையே என்னே மீண்டும் இங்கே வரச் செய்தது” என்ருன் தருமதத்தன்.

"ஆம், இப்போது இந்த ககரம் விழித்துக் கொண்டது. நாம் தவறு செய்தால்கூட கம்மைக் கண்டிக்காது. தவறு செய்யவும் மார்க்கமில்லை. என்ன ஆச்சரியம்! என் உள்ளக்கோயிலில் நான் பூஜித்து வரும் உமது இளமை உருவம் எங்கே! இப்போது இருக்கும் உமது உருவம் எங்கே! அந்த அழகெல்லாம் இப்பொது எங்கே போயின? 'இளமையுங் காமமும் யாங்கொளித் தனவோ!' என் அழகும் இளமையும் போயின. ஆனாலும் என் காதல் இன்னும் உறுதி பெற்றே இருக்கிறது” என்ருள் விசாகை. புத்தமத ஆராய்ச்சியிலே ஊன்றிய அவள் அறிவு இளமையும் அழகும் நில்லா வென்பதை அநுபவத்தில் அறிந்தது. காதல், இளமைக்கும்