இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
174 கலைஞன் தியாகம்
அழகுக்கும் அப்பாற்பட்டதென்பதை அவள் கிலே வெளிப்படுத்தியது. -
அன்று முதல் விசாகை கன்னிமாட வாழ்வை நீத்தாள். அந்தக் கன்னியும் அந்தப் பிரமசாரியும் ஒருங்கே இருந்து, தருமதத்தன் ஈட்டிய செல்வத் தைக்கொண்டு தருமம் செய்வதிலே பொழுது போக்கினர்கள்.
அவர்களுடைய உடல்கள் முதிர்ந்தன; இளமை
அழிந்தது; ஆயினும் அவர்கள் காதல் மேலும் மேலும் முறுகி நின்றது. காதல் தெய்வத்திற்குத் தங்கள் இளமையைப் பலி கொடுத்த அக்காதலர்கள் பெருமையை இன்றும் காம் அறியும்படி மணிமேகலை கொண்டாடுகின்றது.