பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கலைஞன் தியாகம்

பாரம் கடக்கும். அப்பால் கொஞ்சம் வெளி வியா பாரத்தைக் கவனிக்கப் புறப்படுவான். வெயில் 108 டிகிரி உறைக்கட்டுமே; அவனுக்கு லக்ஷயமா என்ன? அவனுடைய மிட்டாய் உருகிவிட்டால்கூட அவனுடைய முயற்சி இளகாது. ஒருமணி அடிப் பதற்கு ஐந்து கிமிஷத்திற்குமுன் பள்ளிக்கூடத்து வாசவில் மறுபடியும் பிரசன்னமாவான். குழந்தை களுக்கு அது சாப்பாட்டு நேரம். ஒருமணி முதல் இரண்டுமணி வரையில் அவனுடைய வியாபாரம் முடுக்காக கடக்கும். இரண்டரை மணிக்கு மறுபடி நகர்வலம் வருவான். கிடைத்தமட்டும் லாபமென்று தெருத் தெருவாகச் சந்து சந்தாகச் சுற்றுவான். சரியாக காலுமணிக்குப் பள்ளிக்கூட வாசலில் ஆஜ ராகி விடுவான். பிள்ளைகள் நாலரைமணி அடித்ததும் பள்ளிக்கூடச் சிறையிலிருந்து வெளி வருவார்கள். போகிற போக்கில் வாயில் அடக்கிக்கொள்ள ஒரு வெங்காயமிட்டாயோ, ஒரு தேங்காய் மிட்டாயோ

வாங்குவாாகள. .

முனிசாமி ஒருநாள் முழுவதும் ஒரே பள்ளிக் கூடத்தில் வியாபாரம் செய்வதும் உண்டு; ஒவ்வொரு வேளேக்கு ஒவ்வொரு பள்ளிக்கூடமாக முறை

வைத்துப் போவதும் உண்டு. எப்படியோ சாயங் காலத்துக்குள் அவனுக்கு எட்டணுக் காசு - எல்லாம் காசுதான்்; அதிலும் தம்பிடிகளே முக்கால் வாசி - கிடைத்துவிடும். அதைக்கொண்டு போ வான் வீட்டுக்கு. - . . .

முனிசாமிக்கு இந்த வியாபாரம் கிரந்தரமாக நடந்துவந்தது. குழந்தைகளுக்கு லீவு நாள் வந்தால்