பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட்டாய்க்காரன் 183

மிட்டாய் அவ்வளவும் சாக்கடையில் விழுந்து கிடந்தன. தட்டை மாத்திரம் எடுத்தான்். எந்தக் கல் தன்னைத் தடுக்கிவிட்டதோ அந்தக் கல்லின்மேல் உட்கார்ந்தான்். நல்ல வேளையாக உடம்பில் காயம் படவில்லை. ஆனால் அவன் உள்ளத்தில் காயம் . أقي ساـسـالا

தன் குழந்தைக்கு ஒரு துணுக்குக் கூடக் கொடுக் காமல் காப்பாற்ற எண்ணிய மிட்டாய் அவ்வளவும் அவன் கண்முன் சாக்கடையில் கிடந்தன. அவற்றில் ஒரு துணுக்குக்கூடப் பிரயோசனப்படாது. பேயறை யாக அறைந்து குழந்தையை வீழ்த்திவிட்டு வங்தான்் அவன்; இங்கே கடவுள் அவனேயே வீழ்த்திவிட்டார்; அவன் பாதுகாத்து வந்த மிட்டாய் முழுவதும் சாக்கடைக்கு உணவாயிற்று.

அவன் முழு மிருகமாயிருந்தால்,’படுபாவி தொட் டான்; இப்படி ஆயிற்று' என்றுதான்் எண்ணியிருப் பான். அவனிடமும் மனிதத் தன்மை இருந்தது. பச்சாத்தாபம் உள்ளத்தில் ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்தது ; தந்தைக்குரிய அன்பு எங்கோ இடங் தெரியாமல் அழுக்கேறி இருந்தது.

அந்தச் சாக்கடைத் தீர்த்தக் கரையில் தன்னைத் தண்டித்த கல்லாகிய ஆஸனத்தில் உட்கார்ந்து உள்ளத்தைத் திறந்து பார்த்தபோது அவனுக்கு ஞாைேதயமாயிற்று; மங்கிப் புதைந்திருந்த இயல்பு கள் அவனுக்குத் தோன்றின. மனிதத் தன்மை, பச்சாத்தாபம், அன்பு எல்லாம் புறப்பட்டன.

"ஐயோ, நான் எத்தனே பாவி அந்த இளங் குழங்தையை அறைந்துவிட்டு வந்தேனே, நான்