பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கலைஞன் தியாகம்

கொண்டுவந்த மிட்டாய் அவ்வளவும் இந்தச் சாக் கடையில் விழுந்துவிட்டதே இப்போது யாருக்கு என்ன பிரயோசனம்? அந்தக் குழந்தைக்குக் கொடுத் திருந்தால் அந்த ஒன்ருவது உபயோகப்பட்டிருக் குமே. அந்தக் குழந்தை உயிரோடு இருக்கிறதோ, இல்லையோ. நான் ஆத்திரத்துடன் அறைந்தேன். படாத இடத்தில் பட்டிருந்தால்- - -

இப்படி கினைத்துப் பார்க்கும்போது அவ ன் உள்ளம் துக்கத்தால் குமுறியது. கண்களில் நீர் ததும்பியது. தலையில் அடித்துக்கொண்டான். சாமி கும்பிட்டுத் திருநீறு இட்டுக்கொண்டேனே; அந்தக் குழங்தை தெய்வத்துக்குச் சமானம் அல்லவா? அதை அறைந்து போட்டுவிட்டு வரலாமா? சாமிக்குத்தான்் பொறுக்குமா? பொறுக்கவில்லை. அதனல்தான்் அவ் வளவையும் சாக்கடையில் சாய் த் து வி ட் டார். எனக்கு கன்ருக வேண்டும் என்று இரங்கின்ை.

முதலில் குழந்தை என்ன ஆயிற்று என்று பார்க்கவேண்டும்’ என்ற வேகம் ஏற்பட்டது. முண்டாசுத் துணியை உதறித் தோளில் போட்டுக் கொண்டு மணியையும் வெறுங்தட்டையும் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

'ஏன், அதுக்குள்ளாற வந்துட்டே? வியாபாரம் ஆயிடுத்தா?” என்று வினவினுள் தாய். அழுது அழுது சோர்ந்துபோன, குழந்தை அவள் மடியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கன்னத்தில் விரல் களின் சுவடும் அதன்மேல் ஓடிய கண்ணிரின் சுவடும் முனிசாமியின் கண்ணில் பட்டன.