பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BL-Rುಹಹಗರಣ 185

"மிட்டாயெல்லாம் கொட்டிப் போச்சு" என்று சோர்ந்த தொனியோடு அவன் சொன்னன்.

"ஐயோ, இந்தக் குழந்தை தொட்டதல்ை வந்த தென்று, இருக்கிற உயிரையும் வாங்கிவிட்டால் என்ன பண்ணுகிறது!’ என்ற பயம் அவளைப் பிடித்துக்கொண்டது. அதனல்,அவன் குழந்தையை அடித்ததைப்பற்றிச் சொல்லி அவன் கோபத்தைக் கிளப்பக்கூடாது என்று எண்ணிப் பேசாமல் இருந்து விட்டாள். அவளுடைய மெளனம் அவன் உள்ளத் தில் ஊடுருவிப் பாய்ந்தது. பேசாமல் தட்டைக் கீழே வைத்துவிட்டுச் சோர்ந்துபோய் மூலையில் உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு ஒன்றும் பேசத் தோன்ற வில்லை; அவளும் பேசத் துணியவில்லை.

சிறிதுநேரம் இந்த மெளனம் நிலவியது. வெளி யில் மெளனம் சாதித்தாலும் அவன் உள்ளத்தில் புயலும் இடியும் எழுங்தன. ஏதாவது பேசிச் சமா தான்ம் செய்துகொள்ளாவிட்டால் அவன் ஹிரு தயமே வெடித்துவிடும்போல் இருந்தது.

'துரங்குதா?’ என்று கேட்டான்.

"ஆமாம்.' -

'ரொம்ப அளுதான்ே?"

"அதெல்லாம் ஏன் விசாரிக்கறே?

"அடி பலமாப் பட்டுதோ?”

'பலமா இருந்தா என்ன? இல்லாட்டிப் போன என்ன?” - -- -

காயம் கீயம் பட்டிருக்குதோ?’