பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட்டாய்க்காரன் 187

முத்தங்களும் மருந்து போல உதவின. அந்தக் குழங்தையின் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. கையில் இருந்த மிட்டாயைக் கடித்துக்கொண்டே தங்தையையும் தாயையும் மாறி மாறிப் பார்த்தது; என்ன தோன்றிற்ருே தெரியவில்லை; களுக்கென்று சிரித்தது; 'சிரிக்கிறதைப் பார், போக்கிரி' என்று சொல்லிக்கொண்டு அவன் ஒரு பெருமூச்சுவிட்டான் அப்பாடி! இப்போது என்ன ஆறுதல் என்ன ஆனந்தம்!